சென்னை: இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். ஷங்கரிடம் உதவியாளராக இருந்து பின்னர் 'ராஜா ராணி' படத்தின் மூலம் தழிழ சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். அப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
இந்த நிலையில் தற்போது 'பாலிவுட் பாட்ஷா' என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தை "ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்" நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
அனிருத் இசையமைத்து உள்ளார். அட்லி படங்களை போல் இது எந்த படம் மாதிரி இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். அட்லியின் முந்தைய படங்கள் மிகப் பெரிய வெற்றி என்றாலும் அவை அனைத்தும் ஏதாவது ஒரு படத்தின் சாயலில் இருக்கும். ஆனாலும் படத்தை புதியதாக கமர்ஷியல் கலந்து எடுத்து தருவதில் வல்லவர் அட்லி. இதனால் 'ஜவான்' படத்தின் மீதும் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கானை இயக்குகிறார் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே 'ஜவான்' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ஜவான்' திரைப்படம் இன்று (செப். 7) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.