ஜப்பான் நாட்டில் புற்றுநோய் கட்டுப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்: அமைச்சர் மா.சு பங்கேற்பு சென்னை:ஜப்பானில், ஜப்பான் நாட்டின் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சர் யசுமாசா ஃபுகுஷிமா (Dr.Yasumasa Fukushima) தலைமையிலான மருத்துவக் குழுவினருடன் தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று புற்றுநோய் கட்டுப்படுத்துதல் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச்செயலாளர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா ஆகியோர் உடனிருந்தனர்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையானது (JICA), ஜப்பான் நாட்டில் செயல்படுத்தப்படும் புற்றுநோய் கொள்கைகள், ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தலைமையாகக் கொண்ட குழுவினர் 5 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ளனர்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தலைமையகம் சென்று, உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், மருத்துவம் மற்றும் தொழிலாளர் நலஅமைச்சர் தலைமையிலான குழுவுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல், தேசிய அளவில் மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள புற்றுநோய் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை
பார்வையிடுவது என்கின்ற வகையில், ஜப்பான் தேசிய புற்றுநோய் மையம், மருத்துவ
கட்டமைப்பினை பார்வையிட உள்ளனர்.
இதையும் படிங்க:'எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழ்நாடு முதன்மை பெறவும் இந்த ஆட்சி துணையாக உள்ளது'