சென்னை:இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாகும். இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரபு படத்தை தயாரிக்க, ஜீ.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக். 28) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் ராஜு முருகன், கே.எஸ்.ரவிக்குமார், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சுசீந்திரன், முத்தையா, சிறுத்தை சிவா, சத்யராஜ், தமன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையில் பேசுகையில், "கைதி படப்பிடிப்பின் போது யாரும் தூங்கவில்லை. இரவு படப்பிடிப்பு தான். அதை பற்றி கூற வேண்டும் என்றால் ஆக்சன் காட்சிகள் தான் அதிகம் எடுத்தோம். சினிமாவைத் தாண்டி கவுண்டமணி பற்றி அதிகமாக பேசுவார் கார்த்தி. அவ்வளவு சீரியஸாக படம் எடுக்கும் போது காமெடி செய்வார்.