இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ராஜ்னிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு! - Chennai District News
16:36 October 11
சென்னை: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவுரை வழங்கியுள்ளது.
அதில், பிரதமரின் ஜன் அந்தோலன் எனும் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை அனைத்து மாணவர்களிடமும் ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் புதிய அன்றாட வாழ்க்கை தொடங்கியுள்ளது. எனவே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கை சுத்தம் ஆகிய மூன்றின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக போஸ்டர்கள், பேனர், துண்டுப்பிரசுரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம். கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள், குறிப்பிட்ட பகுதிகள், சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஆசிரியர்கள், பணியாளர்கள் மாணவர்கள் வாரம் ஒருமுறை எடுக்கலாம். இந்த நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதீத சானிடைசர் பயன்பாடு விளைவுகளை ஏற்படுத்தும்: எய்ம்ஸ் மருத்துவமனை