தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்குகிறது - ஜல்லிக்கட்டு போட்டி 2023

மதுரை மாவட்டத்தில் இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 8 மணி அளவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்குகிறது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக தொடங்குகிறது

By

Published : Jan 15, 2023, 6:27 AM IST

Updated : Jan 15, 2023, 6:41 AM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

தமிழர் திருநாளாம் தைபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. 300 மாடுபிடி வீரர்களும், 600 காளைகளும் பங்கேற்கின்றன. சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.

போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான QR கோடுடன் கூடிய அனுமதி சீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுவருகிறது. போட்டியை முன்னிட்டு காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பிவிடப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதியில் இருபுறமும் பாதுகாப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டி முழுவதும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இயங்கி வரும் 10 உறுப்பினர்கள் கொண்ட அரசுத் தரப்பு 'ஜல்லிக்கட்டு ஏற்பாட்டு குழு மற்றும் கிராமத்தை சேர்ந்த 16பேர் கொண்ட ஆலோசனைக்குழுவும் இணைந்து போட்டியை நடத்துகின்றனர். இந்த போட்டியின் போது கிராமம் சார்ந்த நபர்களுக்கோ, கோவில் காளைகளுக்கோ மரியாதை போன்ற சம்பிரதாயங்களோ அரசியல்கட்சியினர் தொடர்பான விளம்பரங்களோ, அறிவிப்புகள் வெளியிடவோ அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியை பார்வையிடுவதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வருகைதருவார்கள் என்பதால் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் ஆயிரக்கணக்கான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோன்று அவசரகால மருத்துவ தேவைக்காக 10மருத்துவகுழுக்களும், 108 அவசர ஆம்புலன்ஸ் ஊர்திகளும், காளைகளுக்கான தனி ஆம்புலன்ஸ் களும்,தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசார் சோதனையிட்டனர்.

போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசும் , சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்படவுள்ளது.போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் மிக்சி, பேன், கிரைண்டர், குக்கர், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்படுவர், ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர் போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. போட்டி நேரம் நீட்டிப்பு செய்வது தொடர்பாக போட்டியின் நிலையை பொறுத்து மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்கப்படும்.

இந்த ஆண்டு ஆள்மாறாட்ட முறைகேட்டை தடுக்கும் வகையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் க்யூ ஆர் கோடுடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. காலை போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாடுபிடிவீரர்களுக்கு ஊக்கமருந்து மற்றும் மது அருந்தியுள்ளனரா என்ற பரிசோதனையும் உடற்பரிசோதனையும் நடத்தப்பட்டு டீசர்ட் வழங்கப்படும். இதனை தொடர்ந்து காளைக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்பட்டரே அனுமதிக்கப்படும். வாடிவாசலில் இருந்து கலெக்சன் பாயிண்டுக்கு செல்லும் காளைகளுக்கு மீண்டுமொரு மருத்துவபரிசோதனை இந்த ஆண்டு செய்யப்படவுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:"தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு

Last Updated : Jan 15, 2023, 6:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details