சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். இப்படம் விமர்சனரீதியாக தோல்விப் படமாக அமைந்தது. இதனால் ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக கொடுத்துவிட வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருக்கிறார். நெல்சனின் வழக்கமான காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் வெளியான காவாலா பாடலில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.
இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய சூப்பர் ஸ்டார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படத்துக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சினிமா சிதறல்கள்: சந்திரமுகி 2 பர்ஸ்ட் லுக் முதல் இயக்குநர் சாந்தகுமார் பட அறிவிப்பு வரை கோலிவுட் அப்டேட்கள்!!