தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயிலர் ஆடியோ வெளியீடு ஏற்பாட்டு பணியின்போது விபத்து! - ஜெயிலர்

ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக அலங்கார விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம்.

Jailer audio launch Worker injured by electrocution while installing decorative lamp
Jailer audio launch Worker injured by electrocution while installing decorative lamp

By

Published : Jul 27, 2023, 10:01 AM IST

சென்னை:சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்’. இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.

பான் இந்தியா படமாக ஜெயிலர் படத்தை வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்தப் படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘டைகர் கா ஹுக்கும்’ பாடல்கள் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் பரவி வைரலாகி வருகிற நிலையில், ஜெயிலர் படத்தின் 3வது பாடலை நேற்று (ஜூலை 26) படக்குழு வெளியிட்டது.

இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (ஜூலை 28) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அசாம் மாநிலத்தை பூர்விகமாக கொண்டு சென்னை அமைந்தகரையில் வசித்து வருபவர், சங்கர் மாலா (26). இவர் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவிற்காக இன்று அதிகாலை மின்சார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அப்போது திடீரென சங்கர் மாலா மீது மின்சாரம் தாக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த சங்கர் மாலாவை உடனடியாக அருகில் இருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

பின்னர், காயம் அடைந்த சங்கர் மாலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நல்ல முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அலங்கார விளக்கு அமைக்கும் பணியில் ஏற்பட்ட விபத்து குறித்து பெரியமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." சின்னக்குயில் சித்ரா பிறந்தநாள் ஸ்பெஷல்

ABOUT THE AUTHOR

...view details