தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TNPSC: டிச.26-ல் சிறை அலுவலர் பணி தேர்வு! - வந்தாச்சு குட் நியூஸ்

சிறை அலுவலர் பணித் தேர்வு வரும் டிச.26 ஆம் தேதி தமிழ்நாட்டில் 24 மையங்களில் நடைபெற உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 30, 2022, 10:54 PM IST

சென்னை:சிறை அலுவலர் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பெண்கள் 2 பேரும் காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 26 ந் தேதி 24 மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி இன்று (நவ.30) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சிறை அலுவலர் பணியில் ஆண்கள் 6 பேரும், சிறை அலுவலர் பணியில் பெண்கள் 2 பேரும் நியமிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாட்டில் 7 மையங்களில் கம்ப்யூட்டர் வழியில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த பதவிகளுக்கு 26 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளுர், தூத்துகுடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடைபெறும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கவுரவ விரிவுரையாளர் நியமனத்துக்கு அனுமதி.. தகுதி என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details