தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த குற்றவாளி கைது - சென்னை செய்திகள்

திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்தவரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் தேடப்படுவந்த குற்றவாளிக்கு சிறை
கொலை வழக்கில் தேடப்படுவந்த குற்றவாளிக்கு சிறை

By

Published : Aug 3, 2021, 5:58 PM IST

சென்னை:திருவிடை மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன் (26), முகமது ரியாஸ் (27), நிஜாம் அலி (33), ஷர்புதீன் (60) உள்ளிட்ட 12 பேரை திருவிடை மருதூர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியிலுள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ரகுமான் சாதிக் என்பவரை நேற்று முந்தினம் (ஆகஸ்ட் 01) என்.ஐ.ஏ. காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரகுமான் சாதிக்கை பலத்த காவல் பாதுகாப்புடன் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பணத்துக்காக தாய்மாமன், அத்தை கொலை- தங்கை மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details