சென்னை: திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், மருத்துவமனை, கல்வி குழுமம், விடுதி, மதுபான ஆலை, கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷா மற்றும் மருமகன் நாராயணசாமி இளமாறன் ஆகியோர் நடத்தி வரும் சுமார் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அது குறித்து இன்று காலை ஜெகத்ரட்சகன் அடையாறு இல்லத்தில் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறனை வரவழைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீனிஷாவிடம் வருமான வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பாலாஜி மருத்துவமனையின் தலைவராகவும், தாம்பரம் எஸ் ஆர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். மேலும் குரோம்பேட்டை குரோம் லெதர் கம்பெனி, சந்திரகலா ரிசார்ட் மற்றும் ஹோட்டல், அக்கார்டு டிபன்ஸ் லிமிடெட் உள்ளிட்ட 21 நிறுவனங்களின் இயக்குனராக அங்கம் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தற்போது ஸ்ரீநிஷாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெகத்ரட்சகன் மருமகன் நாராயணசாமி இளமாறனிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அவரது மகள் ஸ்ரீநிஷாவாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி 7 மணி நேர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைப்பு!