சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
'ஆசிரியர்கள் பதவி உயர்வில் பழிவாங்க கூடாது..!' - ஜாக்டோ ஜியோ - ஜாக்டோ ஜியோ
சென்னை: "ஆசிரியர்கள் பதவி உயர்வின்போது ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது" என்று, அதன் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்போது பதவி உயர்விற்கான பட்டியல் தயார் செய்யப்படுவதாக அறிகிறோம். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினோம். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் வேண்டுகோளினை ஏற்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் எங்களின் போராட்டத்தினை கைவிட்டோம்.
நாங்கள் முன்வைத்த எந்த கோரிக்கையும் அரசு நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 7,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலையில் உள்ளோம். மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்ப பெறப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் திரும்பபெறவில்லை. ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தடையாக இருக்கும் ஒழுங்கு நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கு தடையாக உள்ள நடவடிக்கை ரத்து செய்யாமல் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டால் உயர்மட்ட குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும், என்றார்.