ஜூலை 24ஆம் தேதி ஜாக்டோ - ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, இரா.தாஸ், கு.வெங்கடேசன், மாயவன், தியாகராஜன் ஆகியோர் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற போராட்டம் காரணமாக 5,068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.