தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பிப்ரவரி 8,9,10ஆம் தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 8, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர்
ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

By

Published : Feb 5, 2021, 4:06 PM IST

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாமலை, சேகர், குமார், தாஸ், சுரேஷ், தியாகராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, "ஜனவரி 2019 ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்து 68 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையை முதலமைச்சர் ரத்து செய்துள்ளதை வரவேற்கிறோம். அரசிற்கு அழுத்தம் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, பொறிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி சரண் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக முன்தேதியிட்டு வழங்குதல், தொகுப்பூதியம் மதிப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தால் பணியிட மாறுதல் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீண்டும் பழைய இடத்தில் பணியாற்றிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் வரும் 8,9,10 ஆகிய மூன்று நாள்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20 பேர் 72 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். தற்போது மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கையை ஏற்றுப் போராட்டம் வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details