தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழங்கப்பட்ட பணியிட மாறுதலை ரத்துசெய்ய வலியுறுத்தல் - ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பணியிடம் மாற்றம் வழங்கப்பட்டதை ரத்துசெய்ய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ ஜியோ

By

Published : Jan 19, 2022, 3:27 PM IST

சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "ஆசிரியர் பொதுமாறுதல் நெறிமுறைகள் விளக்க அரசாணையில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஜாக்டோ-ஜியோ

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 2019 ஜனவரி 22 முதல் 2019 ஜனவரி 30 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகத் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையால், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுப்பட்டதற்காக பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்தில் பணியில் சேர்வதற்கு இயலாத நிலை உள்ளது.

காரணம், போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 90 விழுக்காடு மேற்பட்டோரின் பணியிடங்களில் ஏற்கனவே வேறு ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

மாறுதல் கலந்தாய்வு

எனவே, அப்பணியிடங்கள் தற்போது காலிப்பணியிடங்களாக இல்லை. காலிப்பணியிடத்தில் முன்னுரிமை என்பது பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு முழுமையான தீர்வாகாது. இது முதலமைச்சரின் அறிவிப்பிற்கு முரணாக உள்ளது.

எனவே மாறுதல் கலந்தாய்விற்கு முன்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்தில் பணியாற்றும்விதமாக ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தில் வழங்கப்பட்ட அனைத்துப் பணியிட மாறுதல் உத்தரவுகளையும் ரத்துசெய்து போராட்டதிற்கு முன்பு அவரவர் பணியாற்றிய பழைய பணியிடங்களில் பணியமர்த்தி உத்தரவிட வேண்டும்.

மலை - சுழற்சி அரசாணை

எனவே, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நலன்கருதி தாங்கள் அதற்கான ஆணை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டும். மலை - சுழற்சி அரசாணை ரத்துசெய்யப்பட்டது.

இந்த நிலையில் புதிய விதிமுறைகள் வகுத்து மலை சுழற்சி நடத்திட வேண்டும். இரண்டு ஆண்டுகள் கலந்தாய்வு நடைபெறாத காரணத்தால் இந்த மலைப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வு

ஆகவே மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதலில் செல்ல இயலாமல் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான மலை சுழற்சி முறை நடத்தப்பட வேண்டும்.

மலைப்பகுதியில் உள்ள அனைத்து பணியிடங்களையும் காலி பணியிடமாக அறிவித்து தற்போது பணியாற்றும் ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த முன்னுரிமை அடிப்படையில் (தற்போதைய பள்ளியில் சேர்ந்த முன்னுரிமை கணக்கில் கொள்ளாமல்) பணியிடங்களை நிரப்பவும் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செல்லும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு வழங்கி கலந்தாய்வு நடத்த வேண்டும்.

முதுகலை ஆசிரியர் பதவி

பள்ளிக் கல்வித் துறையில் நேரடி நியமணம் இல்லாத பாடங்களில் இளநிலை, முதுகலை மாற்று பாடங்கள் படித்தவர்களுக்கும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். வணிகவியல் பாடத்தில் 500 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆனால் 29 பேர் மட்டுமே தகுதியான ஆசிரியர்களாக உள்ளனர். பொருளியல் பாடத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஆனால் 15 பேர் மட்டுமே தகுதியானவர்களாக உள்ளனர். மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே முறையாக அனுமதி பெற்று CROSS MAJOR படித்துள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Aparna Yadav Exclusive: பாஜகவில் இணைந்தது ஏன்? அபர்ணா யாதவ் பிரத்யேகப் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details