தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பள்ளிகள் திறந்தும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கவில்லை...!' - பள்ளிக்கல்வித்துறை

சென்னை:  பள்ளிகள் திறந்தும் தற்போது வரை மாணவர்களுக்கு புத்தகம் வழங்காமல் பள்ளிக் கல்வித் துறை உள்ளது என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கவில்லை என  குற்றச்சாட்டு

By

Published : Jun 19, 2019, 3:53 PM IST

Updated : Jun 19, 2019, 7:13 PM IST

ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, அவர் பேசுகையில், "பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்தோம். ஆனால், ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் திட்டமிட்டபடி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

ஜாக்டோ-ஜியோ

பள்ளிகள் திறந்து தற்போது வரை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வந்து சேரவில்லை. ஆனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், செயலரும் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அனுப்பிவிட்டோம். ஆனால் ஆசிரியர்கள்தான் தான் பாடப் புத்தகத்தை எடுக்கவில்லை என ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்" எனப் பேசினார்.

Last Updated : Jun 19, 2019, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details