தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு - chennai jacto jio conference postponed

சென்னை: நாளை (பிப்.28) நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு
ஜாக்டோ ஜியோ மாநாடு ஒத்திவைப்பு

By

Published : Feb 27, 2021, 1:08 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்த‌ சூழ்நிலையில், நாளை பிப்.28ஆம் தேதி நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அவசர கூட்டம் இன்று (பிப்.27) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

நாளை நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன், எதிர்வரும் மே மாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்கப்பட்ட வெற்றி மாநாடு மிக பிரமாண்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டள்ளது.

இதையும் படிங்க: 'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்க' - ஓய்வூதியர் சங்கம் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details