தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரிடம் மனு அளிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு! - jacto geo news

சென்னை: கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி முதலமைச்சருக்கு மனு அளிக்க ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ
jacto geo association

By

Published : Jul 25, 2020, 6:48 PM IST

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை 25) காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும், அந்தப் போராட்ட காலத்தில் குற்றக் குறிப்பாணைகள், காவல் துறை வழக்குகள், பணியிட மாறுதல்கள், பதவி உயர்வு மறுப்பு, ஆண்டு ஊதிய உயர்வு மறுப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு உள்ளான 5 ஆயிரத்து 100 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழுத் தலைவர்கள் பேட்ரிக் ரெய்மாண்ட், ரவிச்சந்திரன் ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் மனு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details