செஸ் விளையாட்டில் ஜாம்பவான்களை இளம் வயதிலேயே வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தும் பிரக்ஞானந்தா சில தினங்களுக்கு முன் நடந்த செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். இந்த நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு அடித்த ஜாக்பாட்! வேலைவாய்ப்பு வழங்கிய இந்தியன் ஆயில் நிறுவனம் - பிரக்ஞானந்தா
செஸ் விளையாட்டில் கலக்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது.
chess
இது தொடர்பாக பேசியுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா , பல சிறுவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் திறமைசாலியான பிரக்ஞானந்தா போன்ற வீரரை தங்களது நிறுவனத்தில் இணைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா பணிக்கால அடிப்படையில் 18வது வயதில் பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Chessable Masters Finals: 2ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - பரிசுத்தொகை எவ்வளவு?