கடந்த சில தினங்களுக்கு முன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜூன் 10ஆம் தேதி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவர் எம்எல்ஏவாக இருந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி்யைக் காலியான தொகுதியாக தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
ஜெ. அன்பழகனின் தொகுதி காலியானதாக அறிவிப்பு! - J.Anbazhagan constituency
17:31 June 15
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் காலமானதையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி. சாமி, குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால், அந்தத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சட்டப்பேரவையில் மொத்தம் மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியான நாளிலிருந்து அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்பது விதியாகும். தற்போது கரோனா சூழலால் இடைத்தேர்தல்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவை எண்ணிக்கை:
அதிமுக – 124, திமுக – 97, காங்கிரஸ் – 7 ,இந்திய யூனியன் முஸ்லீன் லீக் – 1, சுயேச்சை – 1, நியமன உறுப்பினர் – 1 , சபாநாயகர் – 1, காலி இடம் – 3