சென்னை:தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி நேற்று(ஆக.31) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் ட்விட்டர் பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.