காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நான்கு நாள்களாக வருமான வரித்துறை அலுவலர்கள் நடத்திய சோதனை இன்று நிறைவடைந்துள்ளது. அலுவலகங்கள், ஜெபக் கூட்டங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என மொத்தமாக 28 இடங்களில் நடைபெற்ற சோதனையில், 120 கோடி ரூபாய் கணக்கில் வராத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மத பரப்புரை கூட்டங்களுக்கு வரும் வருவாயை கணக்கில் காட்டாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
'கணக்கில் காட்டாத ரூ.120 கோடி முதலீடு' - விசாரணைக்கு ஆஜராக பால் தினகரனுக்கு சம்மன்! - it raid at paul dinakaran properties
வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சம்மன்
அதேபோல், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பால் தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், இன்றுடன் (ஜனவரி 23) இச்சோதனை நிறைவடைகிறது என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Last Updated : Jan 23, 2021, 1:24 PM IST