லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 30ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு நாடுகளில் மார்ட்டின் வருமானத்திற்கு அதிகமாக முதலீடு மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
லாட்டரி அதிபர் வீட்டில் சிக்கிய கோடிக்கணக்கான ரூபாய் பணம்! - லாட்டரி அதிப்ர் மார்ட்டின்
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையிட்டபோது,கணக்கில் வராத ரூ. 595 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவானவரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
3 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை இன்று முடிவு பெற்றது. இந்த சோதனையின் முடிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகங்கள் மற்றும் வீட்டில் கணக்கில் இல்லாத ரூ.595 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத ரூ.619 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது வீட்டிலிருந்து ரூ.8.25 கோடி ரொக்கமும், ரூ.24.57 கொடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், பல கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுப் பத்திரங்களும், தொழில் நிறுவனங்களுக்கான பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.