சென்னையை தலைமையிடமாக கொண்ட ஏவிஎம் எர்த் மூவெர் நிறுவனம், பல்வேறு கட்டுமான நிறுவனத்திற்கு தேவையான ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட ராட்சத உபகரணங்களை சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகள் உள்ளன.
சென்னை ஏவிஎம் எர்த் மூவெர் நிறுவனத்தில் வருமான வரி சோதனை - chennai avm earth mover company
சென்னை: ஏவிஎம் எர்த் மூவெர் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
ரெய்டு
இந்நிறுவனம், பினாமி பெயரில் பல்வேறு நிறுவனத்தை இயக்கி கொண்டிருப்பதாகவும்,வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், ஏவிஎம் எர்த் மூவெர் நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில், ஆவணங்கள் எதுவும் சிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.