சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அறையான சி பிளாக், 10ஆவது மாடியிலுள்ள இ அறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வருமானவரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10 அலுவலர்கள் காவல் துறையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.