தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆருடன் மு.க.ஸ்டாலினை ஒப்பிடுவது நகைப்புக்குரியது - Comparing Stalin with MGR is ridiculous

எம்ஜிஆருடன் மு.க.ஸ்டாலினை ஒப்பிடுவது நகைப்புக்குரியது. எம்ஜிஆர் கால் தூசுக்கு வருவாரா மு.க ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மு.க.ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிடுவது தவறு... ஜெயக்குமார் விமர்சனம்
மு.க.ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிடுவது தவறு... ஜெயக்குமார் விமர்சனம்

By

Published : Sep 17, 2022, 4:12 PM IST

சென்னை:பெரியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை தேனாம்பேட்டை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "மின் கட்டண உயர்வு குறித்து ஆர்.எஸ்.பாரதி பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். சொத்து வரி, குடிநீர் வரி, ஆவின் பொருள்கள் வரை பல்வேறு விலைகளை உயர்த்தி இருக்கின்றனர். மக்கள் கஷ்டப்படுகின்றனர். மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத அரசாக இருக்கிறது திமுக அரசு.

எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் "கரிஷ்மாட்டிக் தலைவர்" என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்துக்கு, எம்ஜிஆரின் அழகென்ன, நடையென்ன, உடையென்ன அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அவரை மு.க.ஸ்டாலினோடு ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம்? என்றும் அவருக்கு ஸ்டாலின் ஈடாவாரா? எம்ஜிஆருடன் ஸ்டாலினை ஒப்பிட்டு பேசுவது நகைப்புக்குறியது. எம்ஜிஆர் கால் தூசுக்கு வருவாரா மு.க ஸ்டாலின்" என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details