தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எதற்கெடுத்தாலும் திமுக அரசை குற்றம்சாட்டுவது ஈபிஎஸ்ஸுக்கு அழகல்ல...!' - அமைச்சர் மா சுப்ரமணியன்

எதற்கெடுத்தாலும் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டுவது அவர் வகிக்கும் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு அழகல்ல என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

’எதற்கெடுத்தாலும் திமுக அரசை குற்றஞ்சாட்டுவது அழகல்ல...!’ - மா.சு
’எதற்கெடுத்தாலும் திமுக அரசை குற்றஞ்சாட்டுவது அழகல்ல...!’ - மா.சு

By

Published : Nov 15, 2022, 9:02 PM IST

சென்னை:போரூர் ஏரிக்கு தண்ணீர் வரும் வழியில் நின்றுகொண்டு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது என தவறாக குற்றம்சாட்டுவதாவும், எதற்கு எடுத்தாலும் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று வரும் 'சுகாதார மாநாடு 2022' தொடக்க நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , 'சுகாதாரத்துறை மாநாடு இன்று(நவ.15) மாலை வரை நடைபெற உள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர், 96 லட்சத்து 32ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன்பெற்று உள்ளனர். 'இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 113 கோடி செலவு செய்யப்பட்டு ஒரு லட்சத்து 26 பேர் பயனடைந்து உள்ளனர்.

கலைஞரின் 'வருமுன் காப்போம்' திட்டத்தின் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டதில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே நடத்தப்பட்ட மருத்துவ முகாம் மூலம் 74 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று உள்ளனர்.

டெங்கு மலேரியா கட்டுக்குள் உள்ளது. டெங்குவைப் பொறுத்தவரையில் கடந்த ஓராண்டில் 5 பேர் மட்டுமே மரணமடைந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மருத்துவ முகாம்களை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் சென்னையில் இல்லை எனக் கருதுகிறேன்.

சென்னை போரூர் ஏரிக்கு நீர் வரும் வழியில் சென்று நின்றுகொண்டு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதாக குற்றச்சாட்டை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். ஆனால், அப்போது அவரின் கால் பாதம் கூட நனையவில்லை.

இவ்வாறு தகவல் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. கடந்த ஆண்டு மழையில் வாரக்கணக்கில் மழை நீர் தேங்கி இருந்தது. இப்போது ஏராளமான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

’எதற்கெடுத்தாலும் திமுக அரசை குற்றஞ்சாட்டுவது அழகல்ல...!’ - மா.சு

சென்னையில் தண்ணீர் தேங்குவதாக கூறிக்கொண்டு போரூரில் நின்று கொண்டு பேசுவது ஏற்புடையதல்ல. எதற்கு எடுத்தாலும் திமுக அரசை குற்றம் சுமத்துவது எதிர்க்கட்சித் தலைவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நளினி ஒரு துரோகி, கொலைகாரி; மக்களிடையே மன்னிப்புக்கேட்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details