தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மிதமான மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - சென்னையில் மழை

சென்னையில் நேற்று வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CHENNAI
சென்னையில் இன்று மிதமான மழை

By

Published : Jun 18, 2023, 12:23 PM IST

Updated : Jun 18, 2023, 2:18 PM IST

சென்னை: கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இந்த நிலையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் வில்லிவாக்கம், பெரம்பூர், வடபழனி, அசோக் நகர், மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, தியாகராய நகர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், கொடுங்கையூர் ஆகியப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இன்று (ஜூன் 18) ஞயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:Cyclone Biparjoy impacts: பிப்பர்ஜாய் புயலின் தாக்கத்தால் ராஜஸ்தானில் கனமழை - விமானங்கள், ரயில்கள் ரத்து!

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மற்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:12 பேரை கொன்ற வெயில், பீகாரில் பல இடங்களில் RED ALERT!

Last Updated : Jun 18, 2023, 2:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details