தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஐடி பெண் ஊழியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! - Chennai news

IT girl murder: சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சங்கிலியால் கை, கால்களை கட்டியவாறு எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 8:01 AM IST

சென்னை: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் கை, கால்களை சங்கிலியால் கட்டியவாறு எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது,அங்கு செல்போன் ஒன்று கிடைத்துள்ளது. பின்னர், அதில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு, இது தொடர்பாக தாழம்பூர் காவல் துறையினர் விசாரித்த நிலையில், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் 25 வயது பெண்தான் சடலமா மீட்கப்பட்டவர் என்பது முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த கொலை எதற்காக நடைபெற்றது, இவ்வாறு கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன, தேடப்படும் நபர் சைகோ கொலையாளியா, இல்லை வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க:வியாசர்பாடி ரயில்வே தண்டவாள கொலை சம்பவம் முதல் சிலை திருட்டு வரை சென்னை குற்றச் செய்திகள்..!

ABOUT THE AUTHOR

...view details