தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: அம்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

it-employee-kills-with-electricity-strikeit-employee-kills-with-electricity-strike
it-employee-kills-with-electricity-strike

By

Published : May 28, 2020, 9:23 PM IST

சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஸ்ரீதேவன்(26). இந்நிலையில் இவரது வீட்டில் உள்ள குடிநீர் போர் பழுதாகியதால், இதனை சரிசெய்ய மின் பழுது நீக்குபவரை அழைத்துள்ளார். ஆனால், தற்போது ஊரடங்கு நிலை நீடிப்பதால், பழுது நீக்குபர் வர இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தானே அதனை சரிசெய்யலாம் என எண்ணிய ஸ்ரீதேவன், போர் மோட்டாரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் ஸ்ரீதேவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், ஸ்ரீதேவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின் இதுகுறித்து அம்பத்தூர் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மதுபோதையில் தேங்காய்த் துருவும் கத்தியால் தாயைத் தாக்கிய மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details