தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஐடி ஊழியர் தற்கொலை! - மாவட்ட குற்றச் செய்திகள்

Chennai IT Employee suicide: சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் 35 லட்சம் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

it-employee-commits-suicide-after-losing-money-invested-in-stock-market-after-taking-loan-of-35-lakhs
35 லட்சம் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்த ஐடி ஊழியர் தற்கொலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 7:17 PM IST

சென்னை:சென்னை பள்ளிக்கரணை, ராஜலட்சுமி நகர் 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் புவனேஷ் (27). இவர் துரைப்பாக்கம் ரேடியல் சாலையிலுள்ள சென்னை ஐடி நிறுவனத்தில் கடந்த இரண்டரை வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (நவ.11) மதியம் 3.30 மணியளவில் பணிக்கு வந்தவர், இரவு 12 மணியளவில் தனது நண்பரோடு 10வது மாடிக்குச் சென்று புகை பிடித்துள்ளார். பின்னர் கீழே வந்து விட்டு மீண்டும் வேலை செய்யும் இடத்திற்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றவர், திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை தொடங்கியுள்ளனர்.

இதில், வங்கியில் 35 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த விரக்தியில் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் அவரது தந்தையிடம் கடன் அதிகமாகி விட்டதாகவும், அதனால் பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதற்கு திடீரென பணம் கேட்டால் என்ன செய்வது என அவரது தந்தை கூறியுள்ளார்.

35 லட்சம் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்த ஐடி ஊழியர் தற்கொலை

இவ்வாறு பணம் கிடைக்காத நிலையில், இளைஞர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல்போனைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் 8.42 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..! 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details