தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலாவிற்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிற்கு சொந்தமான மேலும் 300 கோடி ரூபாய் பினாமி சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.

சசிகலாவிற்கு சொந்தமான மேலும் ரூ. 300 கோடி முடக்கம்
சசிகலாவிற்கு சொந்தமான மேலும் ரூ. 300 கோடி முடக்கம்

By

Published : Aug 31, 2020, 9:39 PM IST

தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு சசிகலா, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா பல கோடி ரூபாயை முறைகேடாக மாற்றி பினாமி பெயரில் ஆயிரத்து ரூ.600 கோடி வரை சொத்துக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது. மேலும், வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், சென்னையில் உள்ள ஜாஸ் சினிமாஸ், ஸ்பெக்ட்ரம் மால், கங்கா சினிமாஸ் உள்பட 10 நிறுவனங்கள் முறைகேடாக வாங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து, சசிகலாவின் பினாமிக்கு சொந்தமான சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் சொத்துக்களை வருமான வரித்துறையினர் 2019ஆம் ஆண்டு முடக்கினர்.

இதைத்தொடர்ந்து வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடாக மேலும் 65 நிறுவனங்கள் 300 கோடி ரூபாய் மதிப்பில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்ஸ் என்ற நிறுவன இயக்குநர்கள் கார்த்திகேயன், கலியபெருமாள், சிவக்குமார் ஆகிய பினாமி பெயரில் சசிகலாசொத்துக்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, சென்னை போயஸ் கார்டன் எதிரே உள்ள 10 கிரவுண்ட் நிலம், சென்னை புறநகர்ப் பகுதிகளில் வாங்கப்பட்டுள்ள 300 கோடி ரூபாய் சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். இதையடுத்து சசிகலா, அவரின் நிறுவன உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவில் பிளவுக்கு வாய்ப்புண்டா? அன்வர் ராஜா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details