தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - இமெயில் முகவரி வெளியீடு - தனியார் மருத்துவமனைகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரி வழங்க்கப்பட்டுள்ளது.

மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் -  இமெயில் முகவரி வெளியீடு
மருத்துவப்படிப்பிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் - இமெயில் முகவரி வெளியீடு

By

Published : Nov 6, 2022, 3:15 PM IST

சென்னை:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்களைத்தேர்வு செய்த மாணவர்கள் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை கல்லூரியில் சேரலாம் எனவும்; அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுலாக கேட்கும் கல்லூரிகளின் மீது புகார் தெரிவிக்கலாம் என மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு பெற்றது. அதனைத் தாெடர்ந்து மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து அக்டோபர் 19, 20ஆகிய தேதிகளில் சிறப்புப்பிரிவு மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 565 மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.

அதனைத்தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரி, தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் 31ஆம் தேதி வழங்கப்பட்டன. மாணவர்கள் 4ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று 7ஆம் தேதி மாலை 5 மணி வரையில் கல்லூரியில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் ஒதுக்கீட்டிற்கான கட்டணங்களைச் செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் கட்டணங்களை செலுத்திய பின்னரே ஒதுக்கீட்டு ஆணைகளைப்பெற முடியும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக்கல்லூரியில் மாணவர்களிடம் அதிகளவில் கட்டணம் வசூல் செய்வதைத் தடுப்பதற்காக முதல்முறையாக கல்விக்கட்டணங்களை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு பெற்று வருகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக்குழு முதுகலை, இளநிலை மருத்துவப்படிப்பிற்கான கல்விக்கட்டணங்களை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது.

அதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை Under Graduate E- Mail – ddugselcom@gmail.com. Post Graduate E-Mail Id – ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிக்கான கட்டண விவரங்களை https://tnmedicalselection.net/news/05112022060421.pdf என்ற இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு..!

ABOUT THE AUTHOR

...view details