சென்னை: மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான 23ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (ஜன.3) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முன்னாள் தலைவர் சிவன் 1,121 மாணவர்களுக்கு தங்க பலகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்ரோ, நாசா இணைந்து சிந்தடிக் ஆபரேட்டர் சாட்டிலைட் என்ற செயற்கைக்கோளை கண்டுபிடிக்க உள்ளனர். இதன் வேலை 700 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பூமியில் நடக்கும் 1 சென்டி மீட்டர் நகர்வை கூட எளிதாக கண்டுபிடிக்கமுடியும்.
காலநிலை மாற்றங்கள், பூமி அதிர்ச்சி, பனி பிரதேசங்களில் பணி உருகும் நிலை, எந்த பகுதியில் அதிக மீன் இருப்பதை கண்டுபிடிக்கும் செயலி குறித்தும் முன்கூட்டிய எடுத்து சொல்லும் திறன் கூடியது. நாசா, இஸ்ரோ இணைந்து கண்டுபிடிக்கபட உள்ள இந்திய செயற்கைக்கோள் இந்தியா, அமெரிக்கா மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு முக்கியமான விடைகளை கொடுக்க உள்ளது.