தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:07 PM IST

ETV Bharat / state

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 உயர்வு.. காரணம் என்ன?

Today gold rate: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.44,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today gold rate
Today gold rate

சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சூழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து, தான் தினமும் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாகச் சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தங்கம் விலை இரண்டு முறை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த திங்கள் முதல் தங்கம் விலையானது தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாகக் கடந்த இரண்டு வாரங்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. சவரனுக்கு ரூ.304 உயர்ந்து சவரன் ரூ.43,280க்கு விற்பனையாகின.

இந்நிலையில், இன்று காலை முதல் தங்கத்தின் விலை எந்தவித மாற்றமின்றி விற்கப்பட்ட வந்த நிலையில், இன்று மாலையில், கமாடிட்டி மார்க்கெட் முடியும் தருவாயில், தங்கத்தின் முதலீடானது அதிகமானது. இதனால் தங்கத்தின் தேவையானது தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 100 ரூபாயும், சவரனுக்கு 800 ரூபாயும் உயர்ந்துள்ளது.

இப்படி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, 44,080க்கும் உயர்ந்துள்ளது.

மேலும் வெள்ளி விலையானது, கிராமுக்கு ரூ 1.50 காசுகள் உயர்ந்து, கிலோவிற்கு 77 ரூபாயும், ரூ.1,500க்கும் உயர்ந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.77,000 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும் இந்த போர் நீடித்தால் தினமும் தங்கத்தின் விலையில் தாக்கம் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னை வரும் சோனியா காந்தி.. பாதுகாப்புப் பணிகள் தீவிரம்.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details