சென்னை:சென்னை அண்ணா சாலையில் 15 தளங்கள் கொண்ட எல்ஐசி கட்டடம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் அடையாளமான இக்கட்டடத்தின் மேல்பகுதியில், எல்இடி பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், மின்கசிவு ஏற்பட்டு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிற இடங்களுக்குப் பரவாமல் தீ அணைக்கப்பட்டதால் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் எல்ஐசி கட்டடத்தில் இன்று மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 15 தளங்கள் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டால், தீயைத் தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்கள் எளிதான முறையில் தீயை அணைக்கும்படி கட்டடம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும், அவசர கால தீயணைப்புக் கருவிகள் சரியான முறையில் இயங்குகிறதா எனவும் சோதனை செய்து பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி சரவணன், "தீயணைப்புத்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் உத்தரவின்பேரில் எல்ஐசி கட்டடத்தில் தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். 1956ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் என்பதால், தீயணைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அந்த குறைபாடுகளை சரி செய்ய வேண்டியுள்ளது.