தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூரண சுந்தரிக்கு திமுக துணை நிற்கும் - ஸ்டாலின் - குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி

மாற்றுத்திறனாளி பூரண சுந்தரிக்கு ஐ.ஏ.எஸ் பணி வழங்கும் விவகாரத்தில் திமுக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

IRS-post-given-to-poornasundari-is-contrary-to-the-reservation-rules-dmk-chief-mk-stalin
IRS-post-given-to-poornasundari-is-contrary-to-the-reservation-rules-dmk-chief-mk-stalin

By

Published : Oct 25, 2020, 10:27 AM IST

சென்னை:மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பூரண சுந்தரி, நான்காவது முறையாக சிவில் சர்விஸ் தேர்வெழுதி இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இவருக்கு ஆட்சியர் பணி வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பூரண சுந்தரி, தன்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என வருத்தம் தெரிவித்தார். மேலும், இந்தச் செயலுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "குடிமைப் பணித் தேர்வில், தனது அயராத முயற்சியால் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரிக்கு ஓ.பி.சி பிரிவின் அடிப்படையிலும், மாற்றுத்திறனாளிக்குரிய பணியிடத்தின் அடிப்படையிலும் ஐ.ஏ.எஸ். பணியை வழங்காமல் ஐ.ஆர்.எஸ். பணி வழங்கப்பட்டுள்ளது. இது, இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது. இதுகுறித்து அவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளார்.

ஏற்கெனவே கேரள மாநில கேடரில் பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி பெண்மணிக்கு ஐ.ஏ.எஸ். பணி வழங்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் பூரண சுந்தரிக்கும் ஐ.ஏ.ஸ். பணி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

பூரண சுந்தரியின் முயற்சிகளுக்கு திமுக துணை நிற்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details