சென்னை: மாங்காட்டில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில், கடந்த 2019-20ஆம் ஆண்டில் மருத்துவ தேர்வுக் குழு பரிந்துரைக்காமல் மாணவர் சேர்க்கை கடைசி நாளான 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ல் ஒன்பது மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்க்கை வழங்கப்பட்டது. இதில், ஐந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, இந்த ஒன்பது மாணவர்களையும் நீக்கம் செய்யும்படி, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தனியார் கல்லூரிக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், படிப்பைத் தொடர அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் பூஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 7 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவர் சேர்க்கைக்காக எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்கிற விவரங்களை மனுவாக தாக்கல் செய்ய மாணவர்களின் பெற்றோருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெற்றோர் தாக்கல் செய்த மனுக்களில், மாணவர் சேர்க்கைக்கு, 45 லட்சம் முதல் 65 லட்ச ரூபாய் வரை நன்கொடையாக செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்குக் கல்லூரி தரப்பில் கூறப்பட்டதாவது, மாணவர் சேர்க்கையின் கடைசி நாளில் 9 இடங்களும் காலியாக இருந்ததால், நீட் தேர்வில் 112 முதல் 290 மதிப்பெண்கள் வரை பெற்ற 9 பேர் சேர்க்கப்பட்டதாகவும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 109 மற்றும் 123 மதிப்பெண்களை வாங்கியவர்களையும், தனியார் கல்லூரிகளில் 107 முதல் 112 மதிப்பெண்கள் வாங்கியவர்களை சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:மதுரையில் மீண்டும் மீன் சிலை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!