தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரவாயலில் வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த தாயும், மகனும் - நடந்தது என்ன? - சென்னை பெண் அடித்து கொலை

மதுரவாயல் அருகே வீட்டிற்குள் தாய், மகன் இரும்பு ராடால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த நிலையில், தாயார் பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 19, 2023, 9:29 PM IST

மதுரவாயல் போலீசார் விசாரணை

சென்னை:மதுரவாயல் அருகே வீட்டிற்குள் தாய், மகன் இரும்பு ராடால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரவாயல் அடுத்த புளியம்பேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் அரி(45) - செல்வி(38) தம்பதியினர். இவர்களது மகனாகிய பூவரசன்(23) என்பவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், இன்று (ஆக.19) தாய் செல்வி மற்றும் அவரது மகன் பூவரசன் ஆகிய இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களது வீட்டில் சென்று பார்த்தபோது தாயும், மகனும் இரும்பு ராடு போன்ற ஆயுதத்தால் பயங்கரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், உடனடியாக இதுகுறித்து மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கணவன் - மனைவி தகராறு: தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் மீது வழக்கு... நடந்தது என்ன?

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் போலீசார், படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த பூவரசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும், தலையில் காயங்களுடன் இருந்த செல்வியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், 'தனது மகனை தானே அடித்து விட்டதாக அவரது தாயார் செல்வி கூறியதாக தெரியவருகிறது. இதனிடையே, உங்களை தாக்கியது யார்? என்று கேட்டபோது, செல்வி பதில் சொல்லாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சென்னை கிரைம் ரவுண்ட்-அப்: பட்டப்பகலில் கொள்ளை அடித்து விட்டு கூலாக சென்ற திருடன்.. கஞ்சா விற்ற ஐ.டி ஊழியர்கள்!

இதையடுத்து மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் வீட்டிற்குள் இருந்தபோது இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கப்பட்டதில் பூவரசனுக்கு பலத்த காயமும் செல்விக்கு லேசான காயமும் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனரா? அல்லது வீட்டிற்குள் வேறு யாரெனும் கொள்ளையடிக்க முயன்ற போது இவ்வாறு தாக்கப்பட்டார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக இவர்களை யாரேனும் தாக்கினார்களா? என்பன உள்ளிட்ட பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும் மகனும் இரும்பு ராடால் பயங்கரமாக தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கி குண்டு வைத்திருந்த அமெரிக்க மாணவர்! சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details