சென்னை:நடிகை ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷ் ஆசைவார்த்தை காட்டி தன்னிடம் பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக தொழிலதிபர் நெடுமாறன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
படப்பிடிப்புத்தளம், பங்களா ஆகியவை கட்டி நெடுமாறன் வாடகைக்கு விட்டுவருகிறார். இந்த நிலையில் 2013ஆம் ஆண்டு திரைப்படம் எடுப்பதற்காக பங்களாவை வாடகை விட்டதன் மூலம் தனக்கு அம்ரீஷ் அறிமுகமானதாக நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
’சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி!
தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும், அதை மலேசியாவில் உள்ள நிறுவனம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயாராக உள்ளதாகவும் அம்ரீஷ், ஆசைவார்த்தைகள் காட்டியதாக நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் நெடுமாறன் குறிப்பிடும் அம்ரீஷின் ஆசைவார்த்தைகள்:
- குறிப்பாக, பெரம்பலூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான கலசத்திலிருந்து ஐ.ஆர். 77 ரக இரிடியம் எடுக்கப்பட்டது.
- 150 தலைக்கட்டுகளுக்குச் சொந்தமான அந்த அம்மன் கோயிலில் உள்ள விலைமதிக்க முடியாத இரிடியத்தை எடுத்து மலேசியாவில் உள்ள நிறுவனத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.
- அக்கோயில் தலைக்கட்டுகளில் முக்கிய நபர்களுக்கும், மலேசியா கொண்டுசெல்வதற்கும் 100 கோடி ரூபாய் அளவில் செலவு செய்தால், இரிடியத்தை விற்பனை செய்துவிடலாம் என்பன உள்ளிட்டு வாக்குறுதிகள் அள்ளிவிடப்பட்டதைச் சுட்டிக்காட்டினார் நெடுமாறன்.
மேலும் வெளிநாட்டினர் மூலமாகவும், பல்வேறு மோசடிகளை செய்து உண்மையாகவே இரிடியம் இருப்பதாக தன்னை நம்பவைத்த கதையும் கூறி நெடுமாறன் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
26.20 கோடி ரூபாய் மோசடி