தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2020, 1:12 PM IST

ETV Bharat / state

ரயில் டிக்கெட்டிற்கு இந்தியில் குறுஞ்செய்தி - தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!

டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதற்கு திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில் டிக்கெட் முன்பதிவு
ரயில் டிக்கெட் முன்பதிவு

தமிழ்நாட்டிலிருந்து ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தால், இந்தி மொழியில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாகவும், இந்தி திணிப்பை வேண்டுமென்றே ரயில்வே அமைச்சகம் மேற்கொள்ளவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'இந்திய ரயில்வேயில் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது.

அதனால் ரயில்வே நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி, அந்தந்த மாநில மொழிகளில் உறுதிப்படுத்தல் செய்தியை அனுப்ப வேண்டுகிறேன்.

தமிழச்சி தங்கபாண்டியன் ட்வீட்

மத்திய அரசு இது போல், அனைத்துத் தளங்களிலும், இந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...தாத்தா-பாட்டி வெட்டிங் போட்டோஷூட் : அரை நூற்றாண்டு கனவை நிறைவேற்றிய பேரன்!

ABOUT THE AUTHOR

...view details