தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வழக்குகளில் ஆஜராக மேலும் ஆறு வழக்கறிஞர்கள் நியமனம்! - அரசு சார்பில் ஆஜராக ஆறு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: அரசு வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜராக மேலும் ஆறு வழக்கறிஞர்களை நியமித்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

அரசு சார்பில் ஆஜராக ஆறு வழக்கறிஞர்கள் நியமனம்
அரசு சார்பில் ஆஜராக ஆறு வழக்கறிஞர்கள் நியமனம்

By

Published : May 29, 2021, 7:58 AM IST

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பின், அரசு தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசுக்கு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் நடைமுறை முடியும் வரை, தலைமை வழக்கறிஞரின் பரிந்துரையின் அடிப்படையில் 17 பேரை தமிழ்நாடு அரசு, மே 13ஆம் தேதி தற்காலிக அடிப்படையில் நியமித்தது.

அதேபோல், மேலும் ஆறு வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு நேற்று (மே.28) நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெங்கடேஸ்வரன், கே.வி. சஞ்சீவ்குமார், எஸ். சூர்யா, ரிச்சர்ட்சன் வில்சன், அமிர்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோர் தற்காலிக வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார்பில் ஆஜராக ஆறு வழக்கறிஞர்கள் நியமனம்

இதையும் படிங்க:'மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை' - ஜிஎஸ்டி அரங்கை அதிரவைத்த பழனிவேல் தியாகராஜன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details