தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முக்கியமான ஏரிகளை ஆய்வு செய்தார் இறையன்பு... - பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

iraianbu  iraianbu inspected important lakes in chennai  iraianbu inspected important lakes  chennai news  chennai latest news  இறையன்பு  தலைமை செயலாளர்  தலைமை செயலாளர் இறையன்பு  ஏரிகளை ஆய்வு செய்தார் இறையன்பு  ஏரிகளை ஆய்வு  பருவமழை  சென்னை செய்திகள்
இறையன்பு

By

Published : Sep 25, 2021, 9:05 AM IST

சென்னை:கடந்த 2015ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் சென்னைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் கால்வாய் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பூண்டி, புழல்,
செம்பரம்பாக்கம், ஆகிய ஏரிகளில் நீர் இருப்பு 80 விழுக்காடு நிரம்பி இருப்பதால், வடகிழக்கு பருவமழை தொடங்கினால் முழு ஏரிகளும் முழு கொள்ளளவை எட்ட கூடும்.

ஏரிகளில் ஆய்வு

இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று (செப்.24) புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று, ஏரியின் நீர்இருப்பு, பாதுகாப்பு உறுதித்தன்மை, ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றும் மதகுகள் தரம், உபரிநீர் கால்வாய் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளே ஆய்விற்காக வரும் போது, பூண்டி காலனியைச் சேர்ந்த மக்கள் சுடுகாட்டுக்கு வழி வேண்டும் என்று மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு

ABOUT THE AUTHOR

...view details