தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்' - இறையன்பு கடிதம் - Unicode typing format

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்படுத்தப்பட்டதாக இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது எனவும் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

'தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்' - இறையன்பு கடிதம்
'தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும்' - இறையன்பு கடிதம்

By

Published : Jun 4, 2021, 7:01 AM IST

Updated : Jun 4, 2021, 7:36 AM IST

இது தொடர்பாக அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழ்நாடு இணைய கல்விக் கழகம்(டிவிஏ) மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோட் அனைத்து வகை தமிழ் குறிஅமைவு(TACE16) கொண்ட எழுத்துருக்கள்(fonts), விசைப்பலகை செலுத்துகைகள்(keyboard drivers) ஆகியவற்றுக்கு தமிழ்நாடு தகவல்தொழில் நுட்பத்துறை ஆணை ஐந்தின்படி, அனுமதி அளித்து வெளியிட்டுள்ளது. இவை இலவசமாக கிடைக்கும்.

மேலும், தகவல் தொழில் நுட்பத் துறையின் கடிதம் எண் 3973இன்படி, அனைத்து அரசு துறைச் செயலாளர்கள், துறையின் தலைவர்கள் ஆகியோர் வானவில், அவ்வையார் எழுத்துருக்களுக்கு பதிலாக மேற்கண்ட தமிழ் யூனிகோட் எழுத்துருவை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து அரசுத்துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இதுவரை வானவில், அவ்வையார் போன்ற எழுத்துருக்களைத்தான் தினசரி பணிகளில் பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் அந்த எழுத்துருக்களை யூனிகோட்டுக்கு மாற்றி அமைக்கின்ற கருவிகள் இல்லாமையால் மேற்கண்ட எழுத்துருக்களை பயன்படுத்தும் நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, டிவிஏ மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோட் மாற்றி அமைக்கும் கருவி(Tamil Unicode Conversion Tool), தமிழ் யூனிகோட் எழுத்துரு ஆகியவைhttp;//www.tamilvu.orgஎன்ற இணைய தளத்தில் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

Last Updated : Jun 4, 2021, 7:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details