சென்னை, கே.கே நகர் பத்ம சேஷாத்திரி மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பள்ளியில் தாளாளர் ஷுலா ராஜேந்திரன், முதல்வர் கீதா ஆகியோர் இன்று (ஜூன். 4) ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர்.
அதனடிப்படையில், காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை அவர்களிடம் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர்கள் ராம்ராஜ், துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல்களை அறிக்கையாக தயாரித்து அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தகவல் இதுகுறித்து, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறுகையில், ’’விசாரணைக்கு வந்த பள்ளியின் நிர்வாகத்தினர் போதுமான அளவில் ஒத்துழைப்பு அளித்தனர். சிறைத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று ராஜகோபாலனிடம் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரிக்க திட்டமிடபடுள்ளது. இவர்காளிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், சென்னையில் பாலியல் புகார் எழுந்த மற்ற பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பியது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணை இன்னும் முடியவில்லை’’ என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு தேர்வை நடத்துவதை விட்டுவிட்டு மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும் - சீமான்