தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலின்போது பணம் பறிமுதல்செய்த விவகாரம்: 3 பேரிடம் விசாரணை - Investigation of 3 persons including the bank manager

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலின்போது 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்த விவகாரத்தில் வங்கி மேலாளர் உள்பட மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வங்கி மேலாளர் உட்பட 3 பேரிடம் விசாரணை
வங்கி மேலாளர் உட்பட 3 பேரிடம் விசாரணை

By

Published : Sep 25, 2020, 3:33 PM IST

வேலூரில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், துரை முருகன், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை ஸ்ரீனிவாசனுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து கணக்கில் வராத 11.48 கோடி ரூபாய், வாக்காளர்களின் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை வருமானவரித் துறையினர் பறிமுதல்செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பணம் புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இதனால் கதிர் ஆனந்த், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

பூஞ்சோலை சீனிவாசனிடம் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில், "வேலூரில் உள்ள கனரா வங்கியில் 500, 2000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக 200 ரூபாய்களாக மாற்றியது தெரியவந்தது.

இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியது கனரா வங்கியின் மேலாளர் தயாநிதி. இவர் தாமோதரன், ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் இணைந்து பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வங்கி மேலாளர் தயாநிதி உள்பட மூவர் மீதும் மோசடி, கூட்டுசதி, இந்திய ஊழல் தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் சிபிஐ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூவரது வீடுகளிலும் சென்னை சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: ‘நேர்மையான காவலர்கள்’ என்று கலாய்த்து புகார் மனு: காவல் துறை விசாரணை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details