தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்படும் - தமிழ்நாடு காவல்துறை - மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

By

Published : Sep 22, 2022, 10:47 PM IST

சென்னை:தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். அவை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: மின் விளக்குப் பராமரிப்பில்லாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.89.56 லட்சம் அபராதம்

ABOUT THE AUTHOR

...view details