ஆர்.ஆர். பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற மனிதராக திகழ்ந்தவர் தயாரிப்பாளரும் இயக்குநருமான ரகுநாதன். கமல் ஹாசனை வைத்து 1975 ஆம் ஆண்டு 'பட்டாம்பூச்சி' என்னும் படத்தை தயாரித்தார். இதில்தான் கமல் ஹாசன் கதாநாயகனாக அறிமுகமானர்.
கமல் ஹாசனை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார் - தயாரிப்பாளர் ரகுநாதன் மரணம்
சென்னை: கமல் ஹாசனை நடிகராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ரகுநாதன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

'தாம்பத்யம் ஒரு சங்கீதம்', 'இவர்கள் வருங்கால தூண்கள்', 'வரப்பிரசாதம்', 'நீ வாழவேண்டும்', 'அக்னிப்பிரவேசம்' உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ரகுநாதன் தயாரித்திருந்தார்.
அவர் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இன்று (மே 22) காலமானார் அவருக்கு வயது 79. சமீபத்தில் அவருடைய தயாரிப்பில் உருவான 'மரகதக்காடு' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பழம்பெரும் தயாரிப்பாளாரன அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.