தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முடிவடைந்தது நேர்காணல்: அடுத்த துணைவேந்தர் யார்? - அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவின் நேர்காணல் இன்று முடிவடைந்துள்ளது.

interview of select a new vice chancellor for Anna University ended today  new vice chancellor  interview of select a new vice chancellor  new vice chancellor for Anna University  new vice chancellor for Anna University ended  new vice chancellor for Anna University  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  அடுத்த துணைவேந்தர் யார்  புதிய துணைவேந்தர்  அண்ணாபல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர்.  அண்ணா பல்கலைகழகம்  அடுத்த துணைவேந்தர்
அடுத்த துணைவேந்தர்

By

Published : Aug 9, 2021, 9:34 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.

இதனையடுத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை தமிழ்நாடு ஆளுநர் நியமித்து உத்தரவிட்டார் .

இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஷீலா ராணி சுங்கத், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

நிறைவடைந்த நேர்காணல்

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்கள் இறுதி செய்யப்பட்டனர். அந்த வகையில் 10 நபர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, அவர்களிடம் தேடுதல் குழு கானொலி மூலம் நேர்காணல் நடத்தி முடித்துள்ளது.

பின்னர் 10 நபர்களுள், 3 நபர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு ஆளுநரிடம் வழங்கப்படும். மூன்று நபர்களிலிருந்து தகுதியான நபரை தமிழ்நாடு ஆளுநர் தேர்ந்தெடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமனம் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க வலியுறுத்தல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details