சென்னை:தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ( TANFINET ) மூலம் தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தப்படவுள்ள நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இன்று (அக்.20) கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப துறை முதன்மைச் செயலர் நீரஜ் மித்தல், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கமல் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "பாரத் நெட் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளைக் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக இணைய வசதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 1815.32 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 1Gbps அளவிலான அதிவேக இணைய வசதி வழங்கப்படும்.