தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் இணைந்து `கிராம சபை மீட்பு வாரம்' கூட்டதை நடத்திவருகின்றன . இந்நிலையில், தமிழ்நாடு அரசால் ரத்து செய்யப்பட்ட (அக்டோபர் 2ஆம் தேதி) கிராமசபை கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டிய அவசியம் குறித்தும், பறிக்கப்படும் ஊராட்சிகளின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வழிகாட்டும் இணையவழி கருத்தரங்கம் வரும் ஞாயிற்று கிழமை காலை 11 மணிமுதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இதில், உள்ளாட்சித் துறை வல்லுநர்கள், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் முன்னோடி சமூகச் செயற்பாட்டாளர்கள் கருத்துரை வழங்குகின்றனர்.